April 6, 2022
தண்டோரா குழு
கோவை நஞ்சுண்டாபுரம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி (55). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து அங்கு உள்ள டீக்கடையில் டீ குடித்துவிட்டு இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பொதுமக்கள் போத்தனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் முதியவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.