December 18, 2024
தண்டோரா குழு
கோவை மாவட்டம்,கருமத்தம்பட்டி கணியூர் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட தனது R15 இருசக்கர வாகனம் காணாமல் போனதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சுபாஷ் சந்திர போஸ் என்பவர் அளித்த புகாரின் மீது பதியப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன், உத்தரவிட்டதன் பேரில், கருமத்தம்பட்டி காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை தேடி வந்த நிலையில் வாகராயம்பாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி@ சண்முகசுந்தரம் மகன் தங்க இசக்கி (21) என்பவரை விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் காவல்துறையினர் மேற்படி நபரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பது தெரியவர, திருடிய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.