June 14, 2022 தண்டோரா குழு
கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் புறப்பட்டது. ரயில்வே அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினர் கொடியசைத்து சேவையை தொடக்கி வைத்தனர்.
கோவையில் இருந்து சீரடி சாய்பாபா கோயில் நோக்கி ஐந்து நாள் பயணமாக அந்த ரயில் புறப்படுகிறது.சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்.
சாதாரண மற்றும் பேக்கேஜ் அடிப்படையில் இரண்டு விதமான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இந்த ரயில் புறப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட்டாக தனியார் நிறுவனம் ரயில்வே விற்கு கொடுத்து முன்பதிவு செய்து பெட்டிகளை பெற்றுள்ளனர்.
மொத்தம் 20 ரயில் பெட்டிகள் சீரடி நோக்கி கோவையில் இருந்து புறப்படுகிறது. சீரடி பயணத்திற்காக மட்டும் அந்த தனியார் நிறுவனம் 38 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளனர்.
இந்திய ரயில்வேயின் லோகோ பைலட் இந்த ரயிலை இயக்குகிறார். உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் மட்டுமே தனியார் சேவை நிறுவனம் செய்துள்ளது.
விமானங்களில் air hosters இருப்பது போலவே இந்த சிறப்பு ரயிலிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை திருப்பூர் ஈரோடு சேலம் பெங்களூரு மற்றும் மந்திராலயம் வழியே சீரடி சென்றடைகிறது.மந்திராலயம் பகுதியில் மட்டும் 5 மணிநேரம் இந்த ரயில் நிற்கும்.