February 9, 2022 தண்டோரா குழு
ஐ.ஆர்.சி.டி.சி( இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம்) சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு தரிசன வாராந்திர ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் மற்றும் விமானம் மூலம் பல்வேறு சுற்றுலாப் பயணங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஐ.ஆர்.சி.டி.சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவையில் இருந்து வாரந்தோறும் செல்லும் சிறப்பு ரயில் சேவை மூலமாக திருப்பதியில் சிறப்பு தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த யாத்திரை நடத்தப்படும். வாரந்தோறும் ரயில் மூலம் திருப்பதி செல்ல குளிர்சாதன பெட்டி வசதியுடனான இருக்கைக்கு, ஒருவருக்கு ரூ.4,600, சாதாரண இருக்கைக்கு ஒருவருக்கு ரூ.3,300 முதல் துவங்குகிறது.
இதில், திருப்பதி சிறப்பு தரிசன கட்டணம், சைவ உணவு கட்டணம்( காலை மற்றும் இரவு), சுற்றுலா வழிகாட்டி, குளிர்சாதன வசதி தங்கும் விடுதி, பேருந்து கட்டணம் உள்ளிட்டவை அடங்கும். இந்த யாத்திரை ரயிலானது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழித்தடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில்
இயக்கப்படும்.
மேலும், விவரங்கள் மற்றும் முன்பதிவுகள் குறித்து தெரிந்து கொள்ள கோவை அலுவலக தொலைப்பேசி எண்கள் 8287931965, 9003140655 தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.