• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் விமானத்தில் பறந்தன

January 16, 2023 தண்டோரா குழு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானம் மூலம் 7 டன் கரும்பு, மஞ்சள், வெல்லம் அனுப்பப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது.இந்தாண்டு பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் கோவையில் இருந்து விமானத்தில் கரும்பு அனுப்பப்பட்டது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

கோவை – ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்ல புக்கிங் செய்யப்பட்டது.கடந்த 8-ம் தேதி முதல் கரும்பு அனுப்பப்பட்டது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது.

முழு கரும்பு கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படுவதால் மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும். இதனால் 400 கிலோ குறைத்து 600 கிலோ கரும்பு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

5 நாட் களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் 5 டன் கரும்பு மற்றும் 2 டன் வெல்லம்,மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும். இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது.இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க