May 9, 2022 தண்டோரா குழு
தமிழ் சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளம் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கலைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக இயக்குனர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணா கோவையில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில், உருவாகி இளம் கலைஞர்கள் சேர்ந்து பணியாற்றி வரும் எசபெல்லா எனும், சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றிப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இதில் ,
பிரபல நடிகர் நிழல்கள் ரவி,இயக்குனர் மற்றும் நடிகரான ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிக்கும் காட்சிகள் நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் படமாக்கப்பட்டது.
இந்நிலையில் படத்திற்கான முதல் போஸ்டர் வெளியீட்டு விழா படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்றது.இதில்,படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ள கோவையை சேர்ந்த விவாகி,தயாரிப்பாளர் பஞ்சாப் தமிழன் டோனி சிங்,மற்றும் நடிகர்கள் நிழல்கள் ரவி,ரமேஷ் கண்ணா ஆகியோர் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டு பேசினர்.
அப்போது பேசிய நிழல்கள் ரவி,
முழுக்க கோவையை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் உருவாக்கும் இந்த படத்தில்,கோவையை சேர்ந்த தாமும் நடிப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய ரமேஷ் கண்ணா,வித்தியாசமான கதைக்களத்தில் எசபெல்லா உருவாகி வருவதாகவும், தமிழ் சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் இளம் இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த கலைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.
படத்தின் தயாரிப்பாளரும்,இதில் முக்கிய ரோலில் நடித்து வரும், பஞ்சாப் தமிழன் டோனி சிங் கூறுகையில்,
இளம் இயக்குனர் வராகியின் முதல் படத்தில் தாம் நடித்த போது அவரின் திறமையை பார்த்து வியந்து,தாம் படத்தை தயாரிப்பதாக தெரிவித்தார்.
பஞ்சாப் தமிழன் சினி வேர்ல்டு தயாரிப்பில் உருவாகி வரும் இசபெல்லா திரைப்படத்தை தொடர்ந்து, இதே தயாரிப்பில் இரண்டாவது படமாக, ஒரு விரல் புரட்சி எனும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.