May 31, 2022
தண்டோரா குழு
பொது சுகாதாரத் துறையின் கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில் கங்கா செவிலியர் கல்லூரி மற்றும் பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்பேரணிக்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அருணா முன்னிலை வகித்தார்.மேலும் திட்ட அலுவலர் விஜயகுமார்,புகையிலைக் கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் சரண்யா தேவி, சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன், உளவியலாளர் தௌபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பந்தய சாலை துணை இயக்குநர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மேலும், புகையிலை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.