• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் விடுமுறை

October 5, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் அன்னூர், ஆனைமலை, பொள்ளாச்சி,காரமடை, கிணத்துகடவு, மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம்,சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்,ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதனை அடுத்து இப்பகுதிகளில் தேர்தல் நடைபெறும் இடங்களில் வரும் 7ம் தேதி காலை 10 மணி முதல் 9ம் தேதி இரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12ம் தேதியும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அனைத்து டாஸ்மாக் கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை விடுமுறை அளிக்கப்படுகிறது.

விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க