• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரு வாரத்தில் 26.97 லட்சம் காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது

April 11, 2023 தண்டோரா குழு

கோவையில் ஒரு வாரத்தில் 26.97 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி மதுபாட்டிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மார்க் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும் 10 ரூபாய் கூடுதலாக பெறப்பட்ட அதற்கான ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படும் எனவும் பின்னர் வாடிக்கையாளர்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபான பாட்டில்களை மதுபான் கடைகளில் திருப்பிக் கொடுத்தால் பெறப்பட்ட 10 ரூபாய் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பத்து ரூபாய் அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

அதே சமயம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி மதுபாட்டில்களை வாடிக்கையாளர்கள் மதுபான கடைகளில் திரும்ப வழங்கிய நிலையில் 10 ரூபாய் திருப்பித் தரப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை இந்த ஒரு வார காலத்தில் 26 லட்சத்து 96 ஆயிரத்து, 71 வாலி மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவை வடக்கு மண்டலத்தில் 166 மதுபான கடைகளில் 17,56,997 மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 12,91,506 மது பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் 4,65,491 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெற்கு மண்டலத்தில் 139 கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 19,24,708 மது பாட்டில்களில் 14,04,565 காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் 5,20,143 மது பாட்டில்கள் திரும்ப வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க