• Download mobile app
05 Oct 2024, SaturdayEdition - 3160
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே இடத்தில் 200க்கும் மேற்பட்ட கீரை வகை கண்காட்சி – ஆர்வமுடன் பார்த்து சென்ற பள்ளி மாணவர்கள் !

October 5, 2024

கோவையில் கீரைகரை. காம் சார்பில் அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாள் கீரை கண்காட்சி துடியலூர் NGGO காலனியில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை கீரை கடை. காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஶ்ரீராம் பிரசாத் இணை நிறுவனர்கள் பிலஸ்ஸி இசபெல்லா மற்றும் பத்மினி சேகர் ஆகியோர் முன்னிலையில் கனரா வங்கியின் கோவை மண்டல துணை பொது மேலாளர் ரதிஷ் சந்திர ஜா தொடங்கிவைத்தார்.

கீரை கண்காட்சி குறித்து கீரை கடை. காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஶ்ரீராம் பிரசாத் கூறுகையில்,

இந்த கீரை கண்காட்சி இன்றைய தலைமுறைக்கு பாரம்பரிய கீரைகள் மற்றும் மருத்துவ மூலிகைகளை தெரிந்து கொள்ளவும் அழிந்து வரும் அரிய கீரை வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியாகும்.

இன்றைய வேகமான உலகத்தில், கீரைகள் மற்றும் மருத்துவ மூலிகைகள் குறித்த பார்வை குறைந்து வருகிறது.கீரையில் பல்வேறு வகையான சத்துக்கள் உள்ளது. எலும்பு ஆரோக்கியத்திற்கான கீரைகள், கண் பார்வைக்கு,மனஅழுத்தம் குறைக்க மூலிகைகள், சர்க்கரை நோய் பராமரிக்க அல்லது எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த கூடிய கீரைகள் மற்றும் தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வு என ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா,பாட்டி காலத்தில் இருந்தது,ஆனால் இப்போது மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் இப்போது உள்ள தலைமுறையினர்களுக்கு துரித உணவுகள் மேல் உள்ள மோகத்தால்,சத்தான கீரை மற்றும் காய்கறிகள் பற்றிய புரிதல் படிப்படியாக குறைந்து வருகிறது.

நவீன வாழ்க்கை முறைகளும் உணவுப் பழக்கங்களும் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், நமக்கு முந்தைய சந்ததியினர் பயன்படுத்திய உணவு வகைகள் மீது நமது கவனம் குறைந்து வருகிறது.பொதுமக்கள் கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்ளவே இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும்,ஒரு காலத்தில் 500 வகையான கீரைகள் மூலிகை செடிகளை உட்கொண்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலானோர் அதனை மறந்து விட்டதாக தெரிவித்த அவர் இது குறித்து பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே கண்காட்சி என்றும் இது போன்ற கண்காட்சியை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அதில் 500க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகை செடிகளை காட்சிப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் பாரம்பரிய இந்திய மருத்துவம் மற்றும் உணவுக் கலாச்சாரத்தில் பயன்படுத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வகையான கீரைகள் மற்றும் மருத்துவ மூலிகைகளின் நேரடி காட்சியுடன், ஒவ்வொரு தாவரத்திற்கும் அதனுடைய ஆரோக்கியம் நன்மைகள் பற்றிய விரிவான விளக்கங்களுடன் காண்பிக்கப்படும். கீரை எக்ஸ்போ 2.0-ன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, இந்த கீரைகளில் பல முக்கியமான நன்மைகளை வழங்கும் போதிலும், நம் உணவுப் பழக்கத்தில் குறைந்துவிட்டதை எடுத்து காட்டுவது.

இந்நூற்றாண்டின் இளம் தலைமுறை பாரம்பரிய உணவு முறைகளிலிருந்து தூரமாக சென்றுள்ளதால், இந்த நடவடிக்கை மிக முக்கியமானதாகும். மாணவர்களிடம் கீரைகள் மற்றும் மூலிகைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவதன் மூலம் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை ஊக்குவிக்கவேண்டும் என்பதே நோக்கம்.

இவை நவீன உணவுப்பழக்கங்களில் கீரைகள் மற்றும் மூலிகைகளைச் சேர்க்கும் ஒரு எளிய வழியாக செயல்படுகின்றன. இந்நிகழ்வில், பார்வையாளர்கள் இவற்றின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி அறிந்து, அவற்றின் சுவையை அனுபவிக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

கீரைகடை.காம் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் பாரம்பரிய கீரைகளின் மகத்தான நன்மைகளை நவீன சமூகத்தில் மீண்டும் அறிமுகப்படுத்துவதும், இந்த எக்ஸ்போவின் மூலம் மக்கள் இயற்கையோடு நெருங்கிப் பழகி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்பதே ஆகும்.

தற்பொழுது உள்ள இந்த கண்காட்சியில் பெரும்பாலானவை காட்சி பொருள்களாகவே மாறிவிட்டதாக தெரிவித்த அவர் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

எக்ஸ்போவின் மற்றொரு முக்கிய அம்சமாக கீரை கடையின் புதிய தயாரிப்புகளான கிரீனி டிப் சூப் மற்றும் ஹெர்பல் டீ ட்விஸ்ட் காட்சிபடுத்தப்பட்டது.

எங்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கு, www.keeraikadai.com அல்லது +91 70949 50005 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இந்தியா முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது.

இந்த கண்காட்சியில், பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க