• Download mobile app
29 Dec 2024, SundayEdition - 3245
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே நேரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

January 3, 2020 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒரே நேரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள், இயக்கங்கள் மற்றும் இதர கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் குடியுரிமை திருத்த சட்டம் நாட்டு மக்களின் நலனுக்கான சட்டம் இந்தச் சட்டத்தை ஆதரிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆதரவுக் குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவினர் மத்திய அரசை வரவேற்றும், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மத்திய அரசின் இந்த சட்டங்களை சில அமைப்பினர் வேண்டும் என்றே தவறாக பரப்புரை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் பிரிவினர் இந்தச் சட்டத்தை ஆதரித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

அதே நேரத்தில், குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க