• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கடந்தாண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை 75631 பேர் பயன்படுத்தியுள்ளனர்

February 6, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்தாண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை 75 ஆயிரத்து 631 பேர் பயன்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஜிவிகே – இஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை விபத்துகள்,மகப்பேறு சிகிச்சை போன்றவற்றுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பொது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாடு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது.

அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டுமே 108 ஆம்புலன்ஸ் சேவையை 75 ஆயிரத்து 631 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகப்பேறு சிகிச்சைக்காக 15 ஆயிரத்து 788 பேரும், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்து 820 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.

மகப்பேறு சிகிச்சைகளுக்காக கர்ப்பிணிகளை அழைக்க செல்லும் போது வீடுகளிலோ அல்லது சம்பவ இடங்களிலோ சில நேரங்களில் குழந்தை பிறக்கிறது. அதேபோல் ஆம்புலன்ஸ்களில் ஏற்றி வரும் போதும் ஒரு சிலருக்கு குழந்தை பிறக்கிறது. இதுபோன்ற சமயங்களில் 108 ஆம்புலன்ஸில் உள்ள தொழில்நுட்ப அலுவலர்களே பிரசவத்திற்கு உதவுகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு மட்டுமே 107 பேருக்கு வீடுகள் மற்றும் சம்பவ இடங்களிலும், 49 பேருக்கு 108 ஆம்புலன்ஸ்களிலும் குழந்தைகள் பிறந்துள்ளன.

இது குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் அதி நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள 7 ஆம்புலன்ஸ்கள், முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதியுடன் உள்ள 50 ஆம்புலன்ஸ்கள், பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் கூடிய 2 ஆம்புலன்ஸ்கள் என மொத்தம் 62, 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதே போல் 4 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் பொது மக்களை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கிறோம்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை (பொள்ளாச்சி), மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை இலவசமாக வீடுகளில் கொண்டு விடும் வாகன சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை 1 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் வரை வழங்கப்படுகிறது. இதன் மூலம் பல தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க