• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் புதிய கலை பண்பாட்டுத்துறை மண்டல மையம் திறப்பு

September 19, 2017 தண்டோரா குழு

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான மண்டல மையமாக கோயம்புத்தூர் கலை பண்பாட்டு மையம் கோவையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலைக்கல்வியை மேம்படுத்தவும் , தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலைஞர்கள் மேம்பாட்டிற்காகவும் கலை பண்பாட்டுத்துறை எனும் ஒரு துறையை 1992-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 6 கலை பண்பாட்டு மண்டல மையங்கள் , தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், அரசு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம், நான்கு அரசு இசைக்கல்லூரிகள், மூன்று ஓவியம் மற்றும் சிற்பக்கல்லூரிகள், 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகள், 30 மாவட்டங்களில் ஜவகர் சிறுவர் மன்றங்கள், நாட்டுப்புறக்கலைஞர்கள் வாரியம் மற்றும் ஓவிய நுண்கலைக்குழு ஆகிய அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டங்களில் நடைபெறும் கலை பணிகளை ஒருங்கிணைக்க அமைக்கப்பட்ட மண்டல கலை பண்பாட்டு மையங்கள் 6 மண்டலங்கள் இருந்த நிலையில் கொங்கு பகுதிக்கென கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை 8 மாவட்டங்களுக்கான மையமாக சேலம் கலை பண்பாட்டு மையம் செயல்பட்டு வந்தது. இதனிடையே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேலம் மண்டலத்தை இரண்டாக பிரித்து கோவையில் மண்டலக் கலை பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்படும் என அறிவித்தார்.

இவ்வறிவிப்பின் படி பணிகள் தொடங்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான மையமாக கலை பண்பாட்டுத்துறையின் ஏழாவது மண்டலமாக கோயம்புத்தூர் கலை பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இம்மையம் மலுமிச்சம்பட்டியில் செட்டிபாளையம் பிரிவு சாலையில் செயல்படும் அரசு இசைக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
“இம்மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு கலைக்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்தல் போன்ற பணிகளுடன் கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெறுதல், கலை விருதுகள் அளித்தல், நாட்டுப்புறக்கலைஞர்கள் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை, வாரிய உறுப்பினர் புதுப்பித்தல், நல உதவிகள் வழங்குதல் , இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் வழங்கப்படும்.

நலிந்த நிலையில் வாழும் சிறந்த கலைஞர்களுக்கான ஓய்வூதிய திட்டம் பரிந்துரை, மாநில அரசின் விருதுகள் பெற்ற கலைஞர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஓய்வூதிய திட்டத்திற்கான விண்ணப்பம் பரிந்துரை மற்றும் சிறந்த கலை அமைப்புகள் கலை சேவைக்கான நோக்கிற்காக மத்திய மாநில அரசின் நிதியுதவிக்காக விண்ணப்பிக்கும் நேர்வில் அதனை ஆய்வு செய்து பரிந்துரைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இவ்வலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்,” என்று கோயம்புத்தூர் மண்டல உதவி இயக்குநர் பா.ஹேமநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க