July 31, 2022 தண்டோரா குழு
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதற்குமுன்னர் அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று தமது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை மேற்கொண்டுள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் காத்திருப்போர் பட்டியல் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட உள்ளது.2008 ல் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையும் தொடங்கப்பட்டது.
அப்போதுதான் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு உறுப்பு மாற்று சிகிச்சைக்கு ஒரு முக்கியத்துவம் கிடைத்தது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் இந்தியாவிற்கு வழிகாட்டி அமைப்பாக இருந்தது.அன்று முதல்
இதுவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்ட கொடையாளர்கள் 1524 பேர்.இதில் மொத்த உறுப்புகளின் பயன்பாடு 5557 ஆக உள்ளது.
அதில் இருதயம் மாற்று சிகிச்சைக்காக 711, நுரையீரல் 676, கல்லீரல் 1404, கணையம் 33, சிறுகுடல் 5, வயிறு 1, கைகள் 4, இப்படி 1524 மூளை சாவடைந்த கொடையாளர்களிடமிருந்து உறுப்புகள் கிடைக்கப்பெற்று பயன்பெற்றுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்தியா முழுமைக்கும் இந்த பணி தொய்வடைந்து இருந்தாலும்,தமிழக முதல்வர் உறுப்பு மாற்று சிகிச்சைகளை வேகப்படுத்த வேண்டும் கொடையாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என திட்டத்தை விரைவுபடுத்த தெரிவித்துள்ளார்.
கொடையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருப்பதால் பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.கடந்த ஏப்ரல் 22 முதல் இன்று வரை 13 கொடையாளர்கள் 50 உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
மே 2021 முதல் இந்த அரசு பொறுப்பு ஏற்றது முதல் ஜீலை 2022 வரை உறுப்புக்கொடையாளர்கள் 114 பேராக உள்ளனர்.479 உறுப்புகள் இதனால் பயன்பெற்றுள்ளது.முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14 மாதத்தில் மட்டும் 588 பேர் பயன்பெற்றுள்ளனர்.588 பேருக்கு உறுப்பு மாற்று பல வகைகளில் உதவியாக இருந்துள்ளது.
இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சையும், ஜவ்வு மாற்று அறுவை சிகிச்சையும் செய்து ஆறு பேர் பலனடைந்துள்ளனர்.சிறுநீரகத்திற்காக விண்ணப்பித்து காத்திருப்போர் 6483,
ஈரலுக்காக 380 பேர் ,இதயம் 43 பேர் ,நுரையீரல் 42 பேர்கணையம் 2பேர்,கைகள் வேண்டி 23 பேர் காத்திருந்து வருகின்றனர்.
தமிழகம் உறுப்பு தானத்தில் முன்னிலையில் இருந்தாலும் தேவைகள் அதிக அளவில் உள்ளது.
குரங்கம்மையால் 80 நாடுகள் பாதிப்படைந்து உள்ளனர்.தமிழகத்தில் பாதிப்பு இல்லை.கனடா, அமெரிக்காவில் இருந்து வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு குரங்கம்மை இல்லை என தெரியவந்தது.திருச்சி மற்றும் நாகர்கோவிலில் தொற்று வதந்தி பரவியது. அதை முழுமையாக பரிசோதித்ததில்
அது வேறு பிரச்சினை என தெரிய வந்தது.அவர்களுக்கு நெகடிவ் என சோதனையில் வந்துள்ளது.கேரளா எல்லையில் வருபவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
கோவை,திருச்சி ,மதுரை போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில் ஆய்வு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.பாதிப்புகள் இருந்தாலும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.ஆனால் பாதிப்பு வராது என சொல்ல முடியாது.குரங்கமை பரிசோதனை செய்ய நம்மிடமே ஆய்வுக்கூடங்கள் அதற்கான வசதிகள் உள்ளது.பூஸ்டர் தடுப்பூசி 3 அரை கோடி பேருக்கு போடும் நிலை உள்ளது.இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.முதல் தவனை தடுப்பூசி 95.63% ஆக உள்ளது. இரண்டாவது 88.62 % உள்ளது.பூஸ்டர் தடுப்பூசி 37லட்சத்து 33 ஆயிரத்து 957 பேர் செலுத்தி கொண்டனர்.பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் 9.63 % தான்.
சென்னையை தொடர்ந்து நாளை முதல் கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.33 வது மெகா தடுப்பூசி முகாம் வரும் ஏழாம் தேதி நடைபெற உள்ளது.50,000 இடங்களில் இது நடைபெற உள்ளது.அதேபோல ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தொடர்ந்து ஊசிகள் போடப்பட்டு வருகிறது.கல்லூரிகளில் ஊசி போடும் பணி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதன்பணி தொடரும்.
செயற்கை அவையங்கள் தமிழ்நாடு முழுவதும் தேவைப்படுபவர்களுக்கு அமைக்கும் பணியும் தொடர்ந்து வருகிறது.தமிழகத்தில் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.4308 காலி பணியிடங்களை நிரப்ப தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இதில் 200
வகையிலான பணிகள் உள்ளது. செப்டம்பர் மாதம் அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மக்களை தேடி மருத்துவத்தில்
82 லட்சத்து 43 ஆயிரத்து 875 பேர் பயனடைந்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் உபகரணங்களுக்கு 36 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் திட்டங்கள் வர உள்ளது.இ எஸ் ஐ மருத்துவமனையில்
விபத்து மற்றும் அறுவை சிகிச்சை மையத்திற்கு 34 அரை லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில்
மரபியல் மருத்துவத்திற்கு மூன்று ஒப்புரவு மையங்கள் 2 கோடியே 73 லட்சத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் கட்டண சிகிச்சைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
13 லட்சம் செலவில் டயாலிசிஸ் இயந்திரம் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மீட்பு மையம் 53 லட்சம் செலவில் இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைய உள்ளது என தெரிவித்தார்.