March 21, 2023 தண்டோரா குழு
இந்திய மற்றும் தமிழ்நாடு கைவினை பொருள் கவுன்சில்,மற்றும் ஆம் எஜுகேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட், ஆகியோர் இணைந்து கோவை அவினாசி சாலையில் உள்ள மீனாட்சி மகாலில் காந்தி சில்ப் பஜார் எனும் கைவினை பொருட்கள் கண்காட்சி கடந்த 17ம் தேதி துவங்கியது.
இந்த மாதம் 26 ந்தேதி வரை நடைபெற உள்ள இதில், கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில், முக்கிய விருந்தினர்கள் ரொனால்ட் செல்விஸ்டின்,மரியா டொமினிக் சேவியோ,தனராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விற்பனை கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து, விற்பனை கண்காட்சியை பார்வையிட்டனர்.
இந்த விற்பனை கண்காட்சியில்,பஞ்சலோக சிலைகள், பித்தளை சிலைகள் மற்றும் விளக்குகள், கற்சிலைகள், தஞ்சை ஓவியங்கள், மரச் சிற்பங்கள், பர்னிச்சர் உள்ளிட்ட வீட்டு அலங்கார பொருட்கள் மேலும்,சமையலறை சாதனங்களாக,மண்பாண்டம், மற்றும் ,மரத்திலான வகைகள்,என தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள், வடிவமைப்புகள் மற்றும் கைவினை பொருட்களை அதனை உருவாக்கிய கலைஞர்களே நேரடியாக விற்பனை செய்கின்றனர்.
மேலும்,ஜவுளிப் பொருட்கள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கும் மகளிருக்கான அழகிய உடைகள், அரிய வகை கற்கள், இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிறந்த பொருட்கள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரம் சிங் மற்றும் முகம்மது தபிரேஜ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.