February 24, 2022
தண்டோரா குழு
கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(42).இவர் அதே பகுதியில் உள்ள குவாரி அலுவலகத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
கண்ணன் தனது காரை மளிகை கடை முன்பு நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி இருந்த கார் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் மதுக்கரை போலீசில் கண்ணன் புகார் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையே திருடுபோன கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் காரை திருடிச்சென்ற கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த நசித் (23) என்பவரை மடக்கி பிடித்தனர். பின்னர் காரை மீட்ட போலீசார் நசித்தை கைது செய்தனர்.