March 19, 2022
தண்டோரா குழு
கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா நகரில் உள்ள தனியார் கல்லூரி வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இருந்து நேற்று இரவு ஒற்றை காட்டு யானை, சிறுவாணி சாலையில் வந்து கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டுவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையில் சென்ற காட்டு யானை காவல் நிலைய மதில் சுவர் மற்றும் கேட்டை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.