• Download mobile app
04 Apr 2025, FridayEdition - 3341
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கைகளால் உருவாக்கப்பட்ட கலாஷா நுண் தனித்துவமிக்க நகைகள் கண்காட்சி துவக்கம்

December 19, 2024 தண்டோரா குழு

கோவையில் கலஷா நுண் நகைகள், தனித்துவமிக்க,ஆடம்பரமிக்க கைவினை நகைகளின் கண்காட்சியை நடத்துகிறது. அடுத்து வரும் விழாக்கள், திருமண விழா நாட்களை முன்னிட்டு இரண்டு நாட்கள் இந்த கண்காட்சி கோவை ரெசிடென்ஸி ஓட்டலில் டிசம்பர் 19, 20 ஆகிய நாட்களில் நடக்கிறது.

அனைத்து வகையான வடிவமைப்புகளில், தங்கம், வைரம், ஜடாவு வகை மற்றும் ஆடம்பரமான நகைகள் இடம் பெறுகின்றன. சொகுசு நகைகளின் சொர்க்கமாக நடக்கிறது.இந்தியாவில் மாபெரும் வகையில் அலங்கரிக்கபட்ட தங்க, வைர நகைகள், கலாச்சாரத்தின் புதையல்களாகவும் கலஷா பொக்கிஷமாக திகழ்கிறது.

இதுகுறித்து பெங்களுரு கலஷா நுண் நகைகளின் உரிமையாளர் ஷரவன் குமார் குடுர் கூறுகையில்,

“இந்த மாபெரும் கண்காட்சி நிகழ்வை, லாப நோக்கமின்றி,நேர்த்தியான முறையில் நடத்துகிறோம். புதியதாக கருத்தாக்கம் கொண்ட மணப்பெண் நகைகள், கோவை வாடிக்கையாளர்களுக்கென்றே சிறப்பம்சங்கள் கொண்ட தங்கம், வைர நகைகளை அறிமுகம் செய்கிறோம். கோவையில் நேர்த்தியான இந்த நகைகளின் களஞ்சியத்தை அறிமுகம் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு நகைகளும் அழகிய, அருமையான வகையில் வடிவமைத்துள்ளோம்.

இவை இந்தியாவின் பாரம்பரியத்தின் நினைவுச் சின்னங்களாக உள்ள கோவில் நகைகளின் வடிவமைப்புகளிலும், அழகான வைரக்கல் பதித்த நகைகளாகவும், பெண்களின் மணப்பெண் அலங்கார நகைகளின் புதையல்களாகவும் திகழ்கின்றன. இந்திய பாரம்பரியத்தில் புகழ் பெற்ற வடிவமைப்புகளிலும், பழமைமிக்க கலச்சாரத்தின் புதுமைமிக்க சேமிப்புகளாகவும் இவை இருக்கும். அணிபவர்கள் ராஜகம்பீரத்தை உணரும் வகையில் இருக்கும். எந்த காலத்துக்கும் ஏற்ற படைப்பில், உங்களது சிறப்பான நாளை இவை அலங்கரிக்கும்,” என்றார்.

துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வித்யா பிரபா நிறுவனர் – பிரிட்ஜ்வுட்ஸ் பள்ளிகள் திவ்யா வெங்கிடபதி (இயக்குனர் – கிட்ஸர்), அன்கிதா தினேஷ் (இயக்குனர் – ரென்கோ மில்ஸ் பி லிமிடெட்), கே ஜே அனுராதா (ஸ்ரீ சிவசக்தி பில்டர்ஸ், சிவசக்தி ஸ்பின்னர்ஸ், தேவராயன்பாளையம்), தீபா சுகுமார் (வஸ்த்ர வில்லா, திருப்பூர்) உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க