July 18, 2024 தண்டோரா குழு
கோவையில் செயல்பட்டு வரும் கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு, ஒவ்வொரு ஆண்டும் கிராப்ட் பஜார் கண்காட்சியை நடத்தி வருகிறது.இந்திய கைவினை பொருள் கலைஞர்கள்,நெசவாளர்களை ஊக்குவிக்கவும்,பொருட்களை நேரடியாக விற்பனை செய்யவும் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.இவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி,பொருட்களை வடிவமைத்தல்,சந்தை விற்பனையை மேம்படுத்துதல் போன்றவைகளுக்கும் உதவி வருகிறது.
இந்த ஆண்டு கிராப்ட் பஜார் கண்காட்சி, கோவை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 18 முதல் 23 வரை நடக்கிறது.ஆறு நாட்கள் நடக்கும் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன.இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைஞர்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்கின்றனர். இதில் துணி வகைகள், கைவினை பொருட்கள் அதிக அளவில் இடம் பெறுகின்றன.
கலை பொருட்கள்: பிச்வாய், கவாட், மதுபானி, பாட், பட்டசித்ரா, வார்லி, கோன்ட், ஓவியங்கள், பங்களா பட்டசித்ரா, குருவாயூர் முரல்கள் போன்றவை இடம் பெறுகின்றன.
கைவினை பொருட்கள்: பித்தளை, கண்ணாடி, மரங்களால் ஆன ஓவியங்கள், கலை பொருட்கள், பாசிகள், வளையல்கள் டோக்ரா இடம் பெறுகின்றனர். சுடிஸ், ரீட், கழிவு துணை மேட்டுகள், உலர்ந்த மலர்கள், கையால் செய்யப்பட்ட புதுச்சேர செருப்புகள், உலோகங்கள், டெரகோட்டா பானைகள், கல்சட்டிகள், நீல குடங்கள், தோல் செருப்புகள், மொசைக் கண்ணாடிகள், ஹாம்மக்ஸ், மூங்கில் கைவினை பொருட்கள், கோலபுரி செருப்புகள், மர ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
சிப்பிகள், கடல் கொம்புகள், தோல் பொம்மைகள், புல் கூடைகள், தாமிர மணிகள், கல் பாத்திரங்கள், நானல் மற்றும் மூங்கில் பொருட்கள், சோலாபித், பால்மைரா கூடைகள், எம்பராய்ட்ரி பைகள், கையால் அச்சிடப்பட்ட பெட்ஷீட்டுகள், கிலிம் கூடைகள், பைகள் மற்றும் பல உப பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
துணி வகைகள்: பாக், தபு, சங்கனேரி பிரின்ட், தோடா, காஷ்மீரி, கலாம்கரி, சந்தேரி, புல்கரி, ஷிபோரி, நாரயண்பேட், வெங்கட்கிரி, காட்பாட், கட்வால், இக்கட், ஒடிஷா மற்றும் பெங்கால் காட்டன். பட்டோலாஸ், சிக்கன்கரி, ட்டை அன்ட் டை, குச் சால்வை, புஜோடி கலா காட்டன்கள், குரோசெட், போதி புத்த கயா டஸ்ஸர்ஸ், காந்தா வேலைகள், பிகானிர் கைவினை பொருட்கள், அஜ்ராக், கோட்டா சேலைகள், மொல்கமரு சேலைகள், முபாராக்புர் நெசவுகள், உருமால் சேலைகள்.
இன்று துவங்கிய இக்கண்காட்சியை காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பொது மக்கள் கண்காட்சியை பார்வையிடலாம்.அனுமதி இலவசம்.