January 13, 2025 தண்டோரா குழு
சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் சுமார் 500 ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
திமுக சார்பில் தமிழகம் எங்கும் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் போனஸ் வழங்கி திமுகவினர் வெகு விர்சையாக கொண்டாடி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆலோசனை படியும்,கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மூலனூர் கார்த்திக் அவர்களின் வழிகாட்டுதல் படியும் கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல தலைவர் ஆரோக்கிய ஜான் தலைமையில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சமத்துவ பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருட்கள் பச்சரிசி, பொன்னிஅரிசி, வெள்ளம், கரும்பு,முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்பட்டது.
இதில் ஜாதி,மதம் பேதமின்றி அனைத்து சமூகத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பயனடைந்தனர்.இதில் குறிப்பாக அதிக அளவில் முன்கள பணியாளர்களாக தூய்மை பணியாளர்கள் பயனடைந்தனர்.
இதுகுறித்து கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் கூறியதாவது :-
திமுகவை பொறுத்தவரை பொங்கல் திருநாளாம் தமிழர் திருநாள் என்றும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. முன்னாள் கழக தலைவர்,ஐந்து முறை தமிழக மக்களால் தமிழக முதல்வராக தேர்ந்த்தெடுக்கபட்டவர் கலைஞர். 2006- 2011 ஆம் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி காலத்தில் தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என அறிவித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தார்.
ஆகவே,கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு சார்பாக எனது தலைமையில் அனைத்து தரப்பு மக்களும் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வருடா வருடம் வழங்கி வருகிறேன் என ஆரோக்கிய ஜான் கூறினார்.