October 14, 2022
தண்டோரா குழு
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஷிக்குள் அல் இஸ்லாம் (வயது 20). இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனிஸ் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக சென்றார்.
பெரியக்கடை வீதி லங்கா கார்னர் பாலம் வழியாக நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 4 பேர் அஷிக்குள் அல் இஸ்லாமிடம் செல்போன் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 4 பேரும் சேர்ந்து அஷிக்குள் அல் இஸ்லாமை தாக்கினர்.பின்னர் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.