September 16, 2024 தண்டோரா குழு
கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள கோயம்புத்தூர் கிளப் வளாகத்தில் நித்திய குருகுலா சார்பில் சர்வதேச டாய்சி மாநாடு வருகிற 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி முடிய 4 நாட்கள் நடக்கிறது
இது குறித்து நித்ய குருகுலா சி.இ.ஓ. சஷி சந்திரன் கூறியதாவது:-
இந்த சர்வதேச டாய்சி மாநாடு முழுமையான ஆரோக்யம் மற்றும் நல்வாழ்வை மையமாக கொண்டு நடத்தப்படுகிறது.டாய்சி என்பது உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிக்கும் ஒரு உடற்பயிற்ச்சி இது தொடர்ச்சியான மென்மையான அசைவுகளை கொண்ட ஒரு எளிமையான தியான பயிற்சி,இது எல்லா வயதினருக்கும் ஏற்றது, முழுமையான ஆரோக்கியத்தை பெற மனதிற்கும் உடலுக்குமான பயிற்சி ஆகும்.
டாய்சி செய்வதனால் நமது கவனம் சக்தி மற்றும் நினைவாற்றலை அதிகப்படுத்தலாம் வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம் ரத்த அழுத்ததை குறைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் கவலை மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வைக் குறைக்கும். தூக்கம் மற்றும் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும் வேலையையும் வாழ்க்கையும் சமமாகவும் சீராகவும் செயல்படுத்த உதவும்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்அப்போது கொல்கத்தா மாஸ்டர் சில்வியா தாஸ் நித்ய குருகுலா துணை நிர்வாகி ஷிப்ரா சுக்லா மற்றும் கார்த்திகே, பூர்ணிமா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியாவிலிருந்து டாக்டர் பால்லாம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அவர் 50 வருட அனுபவம் மிக்க-ஓய்வு பெற்ற மருத்துவர்.
மேலும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.