July 8, 2023 தண்டோரா குழு
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி துவங்கியது.
கோவையில் முதல்முறையாக பெட் கார்னிவல் மற்றும் பூனை கண்காட்சி கோவை இந்துஸ்தான் கல்லூரியில் நேற்று துவங்கியது. கண்காட்சியானது 9ம்தேதியும் நடைபெற உள்ளது.
இதில் பூனை மற்றும் நாய்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தபட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்க உள்ளனர். ,
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய
இன்டி பெட் அனிமல் வெல்பேர் தலைவர் உமா மகேஸ்வரன் கூறியதாவது,
கோவையில் செல்ல பிராணிகள் கண்காட்சி மற்றும், சர்வதேச பூனைகள் கண்காட்சி நடைபெறுவதாகவும்,இதில் 200க்கும் மேற்பட்ட நாய்களும் 150க்கும் மேற்பட்ட பூனைகளும் அனைத்து விதமான செல்ல பிரானிகளும் இதில் கலந்து கொண்டுள்ளது. மேலும், ஒட்டகம், மாடுகள், பாம்புகள், குதிரைகள் இடம் பிடித்துள்ளது. கண்காட்சியில் இந்தியாவில் விலை உயர்ந்த நாய்கள் கூட கண்காட்சியில் இடம்பிடித்துள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவசம் அனுமதி என தெரிவித்தார். இதில் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் என திரளாக கலந்து கொண்டனர்.