February 25, 2022
தண்டோரா குழு
கோவை குனியமுத்தூர் சுண்டாக்காமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் ஷேக் அப்துல் ஹமீத். இவரது மகன் ஷேக் அப்துல் ரஹீப்(16). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் பைக்கில் பொள்ளாச்சி ரோடு ஆத்துப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக் அப்துல் ரஹீப் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். மற்றொரு பைக்கை ஓட்டி வந்த குனியமுத்தூரை சேர்ந்த மோனிஸ் கண்ணன்(22) காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.