• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சிறுநீரக நோய்கள் குறித்து ரோட்டரி சங்கங்கள் விழிப்புணர்வு !

March 15, 2024 தண்டோரா குழு

உலக சிறுநீரக தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கோவையில் உலக சிறுநீரக தினம்ரேஸ் கோர்ஸில் உள்ள காஸ்மாபாலிடன் கிளப்பில் உள்ள கூட்டம் அரங்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவை கிழக்கு ரோட்டரி சங்கம், கோவை மிட் டவுன் ரோட்டரி சங்கம் ,கோவை இன்ஃப்ரா ரோட்டரி சங்கம்ஹான்ஸ் கிளப் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை கிட்னி சென்டர் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் ஈஸ்வரன் டாக்டர் நாகராஜ் காமராஜ்,யோக பிரியாஉள்படபலர் கலந்து கொண்டு பேசினார்கள்.விழாவில் டாக்டர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள்பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை கிட்னி சென்டர் நிறுவனரும் இயக்குனருமான டாக்டர் ராமலிங்கம்கோவை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன்மற்றும் பிரேம்குமார் சஞ்சீவி ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இன்று உலக சிறுநீரக தின விழா உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதை தொடர்ந்து கோவையில் ரோட்டரி சங்கங்கள் கிட்னி சென்டர் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சிறுநீரகத்தை நாம் பாதுகாக்க வேண்டும் சிறுநீரக நோய் வராமல் தடுக்க சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அதேபோன்று ரத்தத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்இந்த இரண்டு முறையும் சிறுநீரக பாதிப்புகளை மிகவும் குறைக்கும்

பொதுமக்கள்வலி மாத்திரைகளை தாமாக உட்கொள்ளக் கூடாது டாக்டரின் அறிவுரைப்படி தான் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்சிறுநீரக விழிப்புணர்வு என்பது மக்களிடம் குறைவாக காணப்படுகிறது.ரோட்டரி சங்கங்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றனர்.

மேலும் படிக்க