January 24, 2025
தண்டோரா குழு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில்,போதைப் பொருள்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்கும் பொருட்டு இன்று (24.01.2025) கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 255 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 157.687 கிலோ கிராம் கஞ்சா கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சசிமோகன் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுவதும் நீதிமன்ற உத்தரவின் படி செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அழிக்கப்பட்டது.