July 14, 2022
தண்டோரா குழு
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் டாக்டர் பகவத் கிஷன் ராவ் காரத் கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச்செயலாளர் A P முருகானந்தம் மற்றும் விவசாய அணி மாநில தலைவர் /கோவை பாராளுமன்ற பொறுப்பாளர் ஜி கே நாகராஜ், கோவை பாராளுமன்ற பார்வையாளர் பாயிண்ட் மணி, மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், மற்றும் கோவை நகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ,கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.