March 28, 2022
தண்டோரா குழு
கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சைலன்ஸர்களை மாற்றியமைத்து அதிக சத்தத்துடன் வேகமாக சாலையில் வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் இதர வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சமும் இடையூறும் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்று சாலையில் அதிக சத்தத்துடன் ஓட்டிச் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலாளர் லோகு கூறுகையில்,
‘‘ அவினாசி சாலை ஜென்னி கிளப் முதல் கொடிசியா வரை காலை முதல் மாலை மற்றும் இரவு வேலைகளில் கல்லூரி மாணவர்கள் அதிவேக பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். இதனால் அங்குள்ள பள்ளி மாணவ – மாணவிகளுக்கும் இதர வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சைலன்ஸர்களை மாற்றியமைத்து அதிக சத்தத்துடன் வேகமாக சாலையில் செல்லும் வாகனங்களை அரசு அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்,’’ என்றார்.