February 15, 2025
தண்டோரா குழு
ஜி ஸ்கொயர் நிறுவனம் கோவையில் 4 வீட்டு மனைத் திட்டங்களை அறிமுகம் செய்து 7 நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த 4 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.170 கோடி ரூபாய் ஆகும்.கோவையில் நீலாம்பூரில் ஜி ஸ்கொயர் பிளிஸ், ராமநாதபுரத்தில் ஜி ஸ்கொயர் உட்லேண்ட், பொள்ளாச்சியில் ஜி ஸ்கொயர் எமரால்டு என்கிளேவ், சரவணம்பட்டியில் ஜி ஸ்கொயர் அர்பனைஸ் ஆகிய 4 வீட்டு மனை திட்டங்களை துவக்கி உள்ளது.இங்கு வீட்டு மனைகள் முறையே ஒரு சென்ட் ரூ.16 லட்சத்திற்கும், ரூ.24.5 லட்சத்திற்கும், ரூ.10.5 லட்சத்திற்கும், ரூ.19.9 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திட்டங்களுக்கு கிடைத்திருக்கும் மிகுந்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்நிறுவனம் அடுக்குமாடி குடியிப்பு, வில்லா கட்டுமானத்திலும் கால் பதிக்க உள்ளது. கோவையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிறுவனத்தின் வீட்டு மனைகள் அனைத்து வசதிகளுடன் மிகவும் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை மதிப்பு உயர்வு மற்றும் வருமானத்திற்கும் உத்தரவாதம் அளிக்கின்றன.இதனால் வீட்டு உரிமையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான விருப்பமான தேர்வாக ஜி ஸ்கொயர் உள்ளது.
இது குறித்து ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறுகையில்,
கோவையில் நாங்கள் அறிமுகம் செய்துள்ள எங்கள் வீட்டு மனை திட்டங்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் இந்த 4 திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.170 கோடி ரூபாய் ஆகும்.அறிமுகம் செய்யப்பட்ட 7 நாட்களில் ரூ.110 கோடி மதிப்பிலான வீட்டு மனைகள் விற்பனையாகி உள்ளன. இது வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாகும். இந்த வெற்றி, சிறந்த மதிப்புமிக்க வீட்டு மனைகளை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
சென்னையில் எங்களின் வெற்றியைத் தொடர்ந்து, கோவையிலும் எங்கள் நிறுவனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் நாங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்கள் கட்டுமானத்தில் கால் பதித்துள்ளோம். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சிறப்பான குடியிருப்புகளை வழங்குவோம் என்றும் பால ராமஜெயம் தெரிவித்தார்.
இது குறித்து தேசிய அளவிலான விற்பனைத் தலைவர் சிவகுமார் பெத்தையன் கூறுகையில்,
வீடு வாங்குபவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த ரியல் எஸ்டேட் திட்டங்களை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவையே எங்களின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளன. புதிய துறைகளில் கால் பதிக்கும்போது தரம் மற்றும் புதுமையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, ஐதராபாத், மைசூர் மற்றும் பல்வேறு நகரங்களில் வீட்டு மனைகள் விற்பனையில் நிலையான இடத்தை பிடித்துள்ள ஜி ஸ்கொயர் சட்ட பிரச்சினைகள் இல்லாமல் தரமான வீட்டு மனைகளை வழங்குவதன் காரணமாக வாடிக்கையாளர்கள் இடையே நம்பிக்கையான நிறுவனமாக விளங்கி வருகிறது.
இன்றுவரை, ஜி ஸ்கொயர் 127க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்து, 15,000 க்கும் மேற்பட்ட திருப்திகரமான வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஒருங்கிணைத்து, ரியல் எஸ்டேட் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல் கட்டுமானத் துறையில் புதிய சாதனை படைப்போம் என்று இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.