October 1, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றம் போன்ற கிளப்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.
விதிமுறைகளுக்கு முரணாக நாளை மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.