October 1, 2023 தண்டோரா குழு
கோவை ஆர்.எஸ்.புரம்,டி.பி.ரோட்டில் (தபால் அலுவலகம் அருகே) டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார்.
விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே. ஸ்ரீதரன் வரவேற்று பேசியதாவது :-
கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், ஆலத்தூர்,திரூர் மற்றும் நெம்மாரா ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது.இதன் இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன் மற்றும் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் மிருதுளா சுனில் ஆகியோர் இந்த மருத்துவமனைக்கு வலு சேர்த்துள்ளனர்.
எங்கள் கண்நல மருத்துவமனை சார்பில், கோவையில் 25 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்துக்குள் இருக்கும் முதியோர்களுக்கு, வீடுதேடிச் சென்று கண் சிகிச்சைகள் வழங்க இருக்கின்றோம்.மாதந்தோறும் 14 வயதுக்குட்பட்ட, 500 பள்ளிச் சிறார்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்க இருக்கின்றோம்.கிராமபுற பகுதிகளில் அடிக்கடி கண்பரிசோதனை முகாம்கள் நடத்தவுள்ளோம்.விரைவில் கோவையில் கண் வங்கியை திறக்கவுள்ளோம்.எங்கள் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு காலந்தாழ்த்தாது அதிவிரைவு சிகிச்சைகள் வழங்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்களில் பிரதானமானதாகும்.
டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையில்,எப்போதும் மாறாத இந்த சூழ்நிலையில் புதிய தொழில்நுட்பங்களுடன் திறம்பட செயல்படும் சர்வதேச தரம் வாய்ந்த தீர்வுகளை தர வேண்டும் என்பதை புரிந்து கொண்டுள்ளோம்.எனவே, சிறப்பான பரிசோதனை,மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள்,சிறப்பான ஆலோசனைகளுடன் கண்களை பாதிக்கும் சவால்களுக்கு சரியான தீர்வுகளை அளிக்கிறோம் என்றார்.
விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் ரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை துவக்கிவைத்து பேசியதாவது :- கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் இது போன்ற மருத்துவமனை துவங்கிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஏ.கே ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மேலும் விழாவில் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கே ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே ஜி பக்தவச்சலம், அன்னபூர்ணா குரூப் நிறுவனங்களின் தலைவர் மணி, நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், வேதநாயகம் மருத்துவமனை டாக்டர் கந்தசாமி, வழக்கறிஞர்கள் நாகசுப்பிரமணியன், சுந்தரவடிவேலு மற்றும் மகாவீர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் பால்சந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.