October 25, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வீடுகள், கம்பெனிகளில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் ஏடிஎஸ் வகை கொசுக்களினால் பரவுகிறது. இதனால், ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியை கண்டறிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளாட்சி துறை, பள்ளிக்கல்வித்துறையுடன் சுகாதாரத்துறை இணைந்து பணியாற்றி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 12 வட்டாரங்களில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு குழுவில் சுகாதாரத்துறை அலுவலர், ஆய்வாளர் என உள்ளனர். இவர்கள், வீடுகள், கம்பெனிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.