January 7, 2025 தண்டோரா குழு
கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த 118 நபர்களை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.
தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படி,மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், வழிகாட்டுதலின் பேரிலும், கோவை சரக காவல்துறை துணை தலைவர் சசிமோகன், மேற்பார்வையில்,கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன், உத்தரவு படி கடந்த 22.12.2024 முதல் கோவை மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் மீது 80 வழக்குகளும், ஆன்லைனில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர்கள் மீது 30 வழக்குகள் என மொத்தம் 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் 118 நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து இரண்டு சக்கர வாகனம்-4, செல்போன்-11 மற்றும் ரூபாய் 2,24,00,170/- பறிமுதல் செய்தும் மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேற்படி சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்
குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.