• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தனியார் கல்லூரியில் ராக்கிங் – 3 மாணவர்கள் மீது வழக்குபதிவு

November 24, 2023 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை ராக்கிங் செய்து தாக்குதல் நடத்திய சீனியர் மாணவர்கள் இருவர் உட்பட மூவர் மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சூலூர் குமரன் கோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்.வி.எஸ் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.இந்தக் கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் இரண்டாம் ஆண்டு பொறியியல் (மெக்கட்ரானிக்ஸ்) கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனுடன் அதே கல்லூரியில் அவரது பாடப்பிரிவல் படிக்கும் 12 மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் சக மாணவர்கள் தங்கி இருந்த போது நேற்று முன்தினம் மாலை அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் குரல் இனியன் மற்றும் அரவிந்த், நான்காம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கரூரை சேர்ந்த கோகுல் ஆகியோர் வந்துள்ளனர்.

அப்போது நால்வரும் இணைந்து ஜூனியர் மாணவர்களிடம்,கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக்கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி எச்சரித்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் பிடிக்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட மாணவன் விடுதியில் இருந்து வெளியே செனறுவிட, நேற்று மாலை பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும் கல்லூரி முடிந்த பின்பு சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்ற மாணவனின் அறைக்கு வருமாறு கூறியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் 12 மாணவர்களும் சென்ற நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் தவிர மற்ற 12 மாணவர்களையும் கோகுல், முத்துக்குமார் ஆகிய இருவரும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இதனை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவனை இருசக்கர வாகனத்தில் ஏற்றுக் கொண்ட முத்துக்குமார் மற்றும் கோகுல் முத்துக்குமாரின் நண்பரான சூலூர் டீக்கடையில் வேலை செய்து வரும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மூவரும் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவனை தகாத வார்த்தையால் திட்டியதோடு கைகளால் தாக்கியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவனின் கைக்கடிகாரம் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்த மூவரும் “சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்” என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதில் நெற்றி பகுதியில் காயமடைந்த பாதிக்கப்பட்ட மாணவன் இதுகுறித்து விடுதி காப்பாளர் இடம் தகவல் கூறிவிட்டு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b),323,506(i),4 of tamilnadu prohibition ragging act ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள முத்துக்குமார் கோகுல் மற்றும் டீக்கடை ஊழியர் தனபால் ஆகிய மூவரையும் பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் சக மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்குதல் நடத்தி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மேலும் ஒரு கல்லூரியில் ராகிங் சம்பவம் அரங்கேறி இருப்பது கோவையில் பயிலும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க