November 27, 2017
கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நூதன முறையில் ஆட்சியரிடம் மனு
மத்திய அரசின் கீழ் செயல்படும் கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தை மூடுவதாக தகவல் வெளியாகி உள்ளதால் , அதனை மூடக்கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கரும்புகளுடன் வந்து நூதன முறையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மத்திய அரசு மூட உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 105 ஆண்டுகள் பழமையான கரும்பு இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோவையில் அமைந்து உள்ளது. இங்கு ஏராளமான புதிய புதிய கரும்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அறிய வகை கரும்புகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர். எனவே இதனை மூடினால் கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுவதால் அதனை மூடும் நோக்கத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். முன்னதாக கரும்புகளுடன் வந்த விவசாயிகள் ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்தனர்.