March 7, 2022 தண்டோரா குழு
தற்கொலை செய்து கொள்வதாகவும் வயதான தம்பதியினர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் திங்கட்கிழமையான இன்று மக்கள்குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.இதில் கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் ஜெகநாதன் (65) மற்றும் அவரது மனைவியும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
அதில் இவரது சொந்தவீட்டை வாடக்கைக்கு மலைச்சாமி மற்றும் அவரது மனைவி பத்மினிக்கு 2013 ம் ஆண்டு விடப்பட்டதாகவும் , இந்தநிலையில் இருவருக்கும் விவகாரத்து ஆகாவே 2018 ம் ஆண்டு மீண்டும் கட்டிடத்தை வாடகைக்கு வேண்டும் என்று கூறி மாதம் ரூபாய் 95000 வழங்குவதாக கூடியுள்ளார்.ஆனால் காலக்கெடு முடிந்தும் வாடகையை தாரமலும் காலம் தாழ்தி வருவதாகவும் தற்பொழுது வரை ரூபாய் 400000 லட்சம் தரவேண்டும் என்றும் கூறினார்.
அவர்களை காலின்செய்ய சொன்னால் அடி ஆட்களை வைத்து மிரட்டுவதாகவும் திமுக பிரமுகர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து மிரட்டுவதாகவும் கூறினார்.மேலும் அந்த கட்டிடத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் ,அவர்களை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்பொழுது அவர்கள் ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் .,உடனடியாக அவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.