October 6, 2021 தண்டோரா குழு
தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கோவையில் மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
மத்திய அரசால் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் அது குறித்து கிராம புறங்களிலும் நகர் புறங்களிலும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை மேலும் ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உறுதிமொழியை முன்மொழிய அரசு ஊழியர்கள் பின் மொழிந்தனர்.அதனை தூய்மை இந்தியா கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
இதனையடுத்து தனியார் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, பயிற்சி ஆட்சியர் சரண்யா ராமசந்திரன் உட்பட 50க்கும் மேற்ப்பட்ட அரசு பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.