• Download mobile app
03 Apr 2025, ThursdayEdition - 3340
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தென்னிந்திய தேயிலை குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

March 7, 2025 தண்டோரா குழு

தென்னிந்திய தேயிலைகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேயிலை சார்ந்த துறையினர் பங்கேற்றனர்.

கோவையில் தென்னிந்திய தேயிலையின் தரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக 2 நாள் கருத்தரங்கம் கோவை அவினாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ரெசிடென்சி அரங்கில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் தேயிலை வர்த்தக சங்கம்,
இந்திய தேயிலை வாரியம்,தென்னிந்திய ஐக்கிய தோட்டக்காரர்கள் சங்கம்,அகில இந்திய தேயிலை வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் கொச்சின் தேயிலை வர்த்தக சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேயிலை உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் என துறை சார்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இரண்டு நாள் நடைபெற உள்ள கருத்தரங்கில் தேயிலை உற்பத்தி வர்த்தகம் தொடர்பான சவால்கள் குறித்த அமர்வுகள், தேநீர் ருசி பார்த்தல்,கோல்டன் லீஃப் இந்தியா விருதுகளுக்கான தேநீர் தேர்வு, வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்பு மற்றும் தென்னிந்திய தேயிலைகளின் மேம்பட்ட தரத்தை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் ஆகியவை இடம்பெற்றன.

கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளரும், தென்னிந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தீபக் ஷா தலைமை தாங்கினார்.

விழாவில் பேசிய இந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார்,

தென்னிந்திய தேயிலைகளின் தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என குறிப்பிட்ட அவர்,இதில் தேயிலைகளில் செயற்கை வர்ணங்கள் சேர்ப்பதை தடுக்க அதிக அளவிலான சவால்கள் இருப்பதாக கூறினார்.தென்னிந்திய தேயிலை வளமான பாரம்பரியம்,மற்றும் நல்ல தரத்தால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நல்ல வரவேற்பு இருப்பதாக கூறிய அவர்,ரஷ்யா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக அளவில் ஏற்றுமதி ஆகி வருவதாக தெரிவித்தார்.

முன்னதாக காலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில்,தென்னிந்திய தேயிலையின் ஆரோக்கிய பயன்கள் குறித்து விழிப்புணர்வு வாக்கதான் நடைபெற்றது.
இதில்,500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கி தேயிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் படிக்க