January 9, 2023 தண்டோரா குழு
களரி ஃபைட் ஃபெடரேசன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான களரி ஃபைட் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் துவக்க விழா கோவை பீளமேடு பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை கோவை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.
சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் கத்தி சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதியிலிருந்து 175க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
ஏழு வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.எந்த போட்டியில் 27 பெண்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் சி.வி.என் கைலாசம் களரி, ரமேஷ் ஆர்.நாயர் குருக்கள், பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ருத்ரமூர்த்தி பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ்,களரி ஃபைட் ஃபெடரேசன் ஆப் இந்தியா பொருளாளர் சாஜி நிர்வாகி மேத்யூ, நகளரி கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பிஜி வர்கீஸ், இணை செயலாளர் சுரேஷ் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.