September 17, 2022
தண்டோரா குழு
கோவை செட்டிப்பாளையத்தில் உள்ள கரிமோட்டார் ஸ்பீடுவேயில் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் தேசிய அளவிலான கார்பந்தய போட்டிகள் நடைபெற உள்ளது.
ஜே.கே. டயர் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு இந்த தேசிய சாம்பியன் போட்டிகள் துவங்கப்பட்டது. இதன் 25-ம் ஆண்டு போட்டிகள் மேற்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. இதில் எல்.பி.ஜி. பார்முலா 4, ஜே.கே. டயர் நோவிஸ் கோப்பை, ராயல் என்பீல்டு காண்டினென்டல் ஜி.டி. கோப்பை, எண்டூரன்ஸ் லீக் கோப்பை ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடக்கிறது.
எல்.பி.ஜி. பார்முலா பந்தயத்தில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 25 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் நடப்பு சாம்பியனான தமிழக வீரர் விஷ்ணு பிரசாத் கலந்து கொள்ள வில்லை. இதனைத்தொடர்ந்து நடைபெறும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.