January 28, 2022
தண்டோரா குழு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஒரு மண்டலத்திற்கு மூன்று பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிவானந்தா காலனி பகுதியில் டெப்டி தாசில்தார் மூர்த்தி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் வரும் வாகனங்களை நிறுத்தி வாகன தணிக்கை நடைபெற்றது.