June 1, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 327 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 498 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 180 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து 1,931 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.