October 2, 2021 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வளர்ப்போரை சிறப்பு செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அண்ணல் காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட இக்கரை போளுவம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சதானந்தம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்கள் சமூக இடைவெளியிடனும், முக கவசம் அணிந்தும், கலந்து கொண்டனர்.
ஊராட்சி தலைவர் மற்றும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் அனைவரும் உறுதி மொழியெற்று துவங்கிய இந்த கிராம சபை கூட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் வசதிகள் குறித்தும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து இக்கிராம சபை கூட்டத்தின் தீர்மானமாக பசுமையான கிராமத்தை உருவாக்க ஊராட்சி பகுதிகள் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அளித்தல், 15வது நிதிக்குழு மானியம் மூலம் கழிப்பிடம் அமைத்தல், MGNRGS திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி அமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு மண் வார்ப்பு அமைத்தல், மற்றும் பசுமையான கிராமத்தை உருவாக்கும் முயற்சியாக மரங்களை நட்டு அதனை பராமரித்து வளர்க்கும் சொந்த வீடு வைத்திருப்போருக்கு சிறப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பள்ளி திறப்பு குறித்தும் கொரனா நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி தடுப்பூசி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மண்டல அலுவலர் ஸ்ரீதர், ஒன்றிய வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் சுந்தரி துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர் மாவட்ட கல்வி அலுவலர், கிராம அலுவலர், இதர துறை அரசு அலுவலர் தன்னார்வ தொண்டு அமைப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.