September 16, 2021 தண்டோரா குழு
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் கே.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில், கர்ப்பிணிகளுக்கு மஞ்சள்,குங்குமம் இட்டு நலங்குகள் செய்து சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தமிழக அரசின் சமூக நலத்துறை , ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்துறை சார்பில்,கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்புத் திருவிழா நடத்தப்பட்டு சீர்வரிசைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது .
சாய்பாபாகாலனி,கே.கே.புதூர் மணியம் வேலப்பர் வீதியில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், தி.மு.க. ,சாய்பாபா காலனி பகுதி பொறுப்பாளர் ரவி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபீக் கலந்து கொண்டார்.
திட்ட அலுவலர் திலகா முன்னலையில் நடைபெற்ற, இவ்விழாவில் கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து வளையல் , மஞ்சள் , குங்குமம் இட்டு நலங்குகள் செய்து சீர்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்து பரிமாறப்பட்டது.
கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இதில்,பொறுப்பு குழு,வட்டக்கழகம்,கிளை நிர்வாகிகள், நடராஜன்,சுக்குருல்லா பாபு,கண்ணன், வினோத், தனபால், அமீன், சிராஜுதீன்,பத்மநாபன்,ஆறுமுகம்,ஜே.பி.கண்ணன்,ஹரீஷ்,பாதல்,இசாக்,நஸ்ருதீன்,வதம்பை சீனி,வரதராஜ்,பைசல்,பாபு,சேக் முகம்மது,மற்றும் வட்டபிரதிநிதிகள் செல்லையன்,அருணாச்சலம்,ஷயாம்,சுப்ரமணியம்,குமரேசன் உட்பட மகளிர் அணி உறுப்பினர்கள்,என பலர் கலந்து கொண்டனர்.