January 6, 2025 தண்டோரா குழு
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாட்டின் சமூகப் பொருளாதார தாக்கம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த 2வது சர்வதேச மாநாடு நடைபெற்றது.
விழாக்கு வந்திருந்த அனைவரையும் டீன் சங்கீதா வரவேற்று பேசினார்.இந்த சர்வதேச கருத்தரங்கிற்கு கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் மற்றும் இயக்குனருமான டாக்டர்வாசுகி தலைமை தாங்கினார். 7 -ந் தேதி முடிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கை
மத்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான திட்ட துறை(SPARC),கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) மற்றும் யு.கே.டீஸைட் பல்கலைக்கழகம், மிடில்ஸ்பரோ யுனைடெட் கிங்டம்,கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
இணைந்து நடத்தியது.