April 24, 2023 தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சீனியர் பிரிவினருக்கான வூசு போட்டியில் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வூசூ சங்கம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட வூசு சங்கம் ஆகியோர் இணைந்து, , 20 வது மாநில அளவிலான சீனியர் பிரிவினருக்கான வூசு போட்டிகள் கோவையில் நடைபெற்றது.சரவணம்பட்டி பகுதியில் உள்ள மான்செஸ்டர் சர்வதேச பள்ளி வளாக அரங்கில் நடைபெற்றது.உடல் எடையில் ஆண்களுக்கு 11 பிரிவுகளாகவும்,பெண்களுக்கு எட்டு பிரிவுகளாகவும் நடைபெற்ற இதில் தமிழகத்தின் கோவை, மதுரை,திருச்சி,நெல்லை, தூத்துக்குடி,உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வூசு சங்கத்தின் மாநில தலைவர் அலெக்ஸ் அப்பாவு தலைமையில் நடைபெற்ற இதில்,சங்கத்தின் பொது செயலாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார்.இதன் துவக்க விழாவில், ஒய்.டபிள்யூ,சி.ஏ. தலைவர் ஜெயகுமார் டேவிட்,மற்றும் சுதாகர் பால்,மேன்செஸ்டர் பள்ளி நிர்வாகி நந்தா கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ஒரு நாள் போட்டியாக நடைபெற்ற இதில்,சான்சூ, டாவுலு ஆகிய இரு பிரிவுகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை நிரூபித்தனர்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர காவல்துறை இணை ஆணையர் சந்தீஷ்,மற்றும் மான்செஸ்டர் சர்வதேச பள்ளியின் தாளாளர் பிரியா,ராஜேஷ் வாசுதேவன்,சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு,வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில்,கோவை மாவட்ட வூசு சங்க தலைவர் கணேசன் மற்றும் பல்வேறு நிலை நிர்வாகிகள் சபீர்,ரவி,தங்க பாண்டியன்,கோபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.