April 7, 2024 தண்டோரா குழு
நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஆர்.வி ஓட்டலில் சனிக்கிழமை மதியம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார்.மாநில அமைப்பு செயலாளர் ஜி.ஏ ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலாளர்கள் எஸ் துரைராஜ், வி செல்வராஜ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் ஆர் நாகராஜன், கோவை, ஈரோடு, திருப்பூர் கோவை மண்டல செயலாளர் வி என் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் டி எஸ் பிரபு ராஜா தலைமை உரையாற்றினார்.
தொடர்ந்து,கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளிடம் இருந்து தேங்காயை நேரடி கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெயை பிழிந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு லிட்டரும், அதேபோல் பத்து மாதம் தேங்காயும் இந்தியா முழுவதும் உள்ள அரசு நியாய விலை கடைகளில் விநியோகம் செய்ய மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதாகவும், தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க அனுமதிக்கவும், கள்ளை மதிப்பு கூட்ட பொருளாக உயர்த்தி ஏற்றுமதி செய்யவும் அனுமதிக்கவும், 60 வயது மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கவும், கல்வி வேலை வாய்ப்பு விவசாய குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும், விவசாயம் காக்க தென்னை, பணையில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களை மதிப்பு கூட்டு பொருளாக தயாரித்து ஏற்றுமதி செய்ய கோவை மண்டலத்தில் மாபெரும் தொழில் கூடம் அமைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கோவை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாரத ஜனதா கட்சியின் வேட்பாளர் அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக, வாக்கு சேகரிப்பதற்கும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், மாநில பொருளாளர் டி எஸ் முத்துசிவன் நன்றியுரை ஆற்றினார். இதில் நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.