June 13, 2023
தண்டோரா குழு
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நாய்களை தகனம் செய்வதற்காக நாய்கள் மின்மயானம் இன்று திறக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப்,மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷணன் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம்ஆட்சியர் கூறுகையில்,
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாய்களுக்கான கிரிமிட்டோரியம் அதாவது மின்மயானம் ரோட்டரி கிளப் ஆப் ஸ்மார்ட் சிட்டி பங்களிப்புடன் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கு வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை தகனம் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். தெரு நாய்களுக்கு கட்டணங்கள் இல்லை. ஒரு நாளுக்கு 6 நாய்கள் வரை தகனம் செய்யப்படும். கழிவுகள் வெளியே வராமல் எல்பிஜி மூலமாக சுகாதாரத்துக்கு எந்த கேடு இல்லாமல் இந்த பணிகள் நடக்கும்.
மாநகராட்சி பகுதிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் இறந்தால் அதனை அப்புறப்படுத்த போதிய இட வசதி இல்லை.தற்போது இந்த மின்மயானம் மூலம் தெரு நாய்கள் இறந்தால் அப்புறப்படுத்தலாம்.இதனால் சுகாதாரக்கெடு தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.