• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நிபா வைரஸ் இல்லை : மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் ஆட்சியர் தகவல்

September 7, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் இல்லை மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்திற்கு வரும் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (இரண்டு தவணை) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.அவ்வாறு சான்றிதழ்கள் இல்லாதபட்சத்தில்; சோதனைச் சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.குறிப்பாக காய்ச்சல் அறிகுறி தொடர்பாகவும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், நிபா வைரஸ் பரவி வருதாலும், கேரளா மாநிலத்தின் எல்லைப்பகுதிகளான கோவை மாவட்டத்தின் வாளையார், முள்ளி, மேல்பாவியூர்,வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை,ஆனைகட்டி உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை வருவாய்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கோவை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வருகை தரும் மாணவ- மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களின் வாயிலாக தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னேச்சரிக்கையாக 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 3பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று பரவல் ஏற்படவில்லை. யாருக்கும் தொற்றின் அறிகுறிகள் இல்லாத போதிலும்,முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிகள் கல்லூரிகள் திறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பிலிருந்தே பெற்றோர் ஆசிரியர் சங்கங்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதே இடத்திலே தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டது. இம்முகாம்களில் பெரும்பாலன பெற்றோர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கொள்ளளவு 50கிலோ லிட்டர் இருந்தது. தற்போது 83 கிலோ லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது. அதுதவிர தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி அளவும் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை. பள்ளிகள், கல்லூரிகளில் அறிகுறி இருப்பவர்கள் தயங்காமல் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவ்வப்போது எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் கடை தவிர பிற கடைகள் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 6 மணிக்கு பிறகு ஹோட்டல்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே மூன்றாவது அலை வரமால் தடுத்து தற்போது உள்ள தொற்றின் அளவை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் நோய் எவ்வாறு மனிதர்களை தாக்கி அவர்களின் நரம்பு மண்டலங்களை எந்தளவு பாதிக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அதிக அளவிலான வெப்பநிலை இருந்தால் அவர்களுக்கு டெங்கு, நிபா, கொரோனா உள்ளிட்ட தொற்றுக்களின் அறிகுறிகள் உள்ளதா? என முதலில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்தவர்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் படிக்க