• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததால் 4 அரசு பேருந்துகள் ஜப்தி

December 22, 2021 தண்டோரா குழு

கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததால் 4 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் குருபிரசாத், தனது நண்பர் இருசக்கர வாகனத்தை சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், குருபிரசாத்தின் வலது கால் முட்டிக்கு கீழ்பகுதி துண்டிக்கப்பட்டது. விபத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, எதிர்கால வாழ்க்கை பாதிப்புக்கு இழப்பீடாக ரூபாய் 30 லட்சம் வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் குருபிரசாத் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தால் வலது கால் முட்டிக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளதால்,விபத்துக்கு முன்பிருந்ததைப்போல அவரால் நின்று பணியாற்ற முடியாது என்றும், மருத்துவ வாரியம் அளித்த சான்றில் 80 சதவீதம் நிரந்த ஊனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதன் அடிப்படையில், அவருக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, வலி,வேதனை உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக ரூபாய் 30.99 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் அரசுப் போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன்பிறகும், உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் உத்தரவை நிறைவேற்றும் மனுவை குருபிரசாத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம், அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில், 4 அரசுப்பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.பின், வழக்கின் உத்தரவுப்படி இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான உறுதி அளிக்கப்பட்டதால், ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்துகள் விடுவிக்கப்பட்டன.

மேலும் படிக்க